தேர்தல் நிலவரம் : சேலத்தில் கடுப்பான கருணாநிதி.... ஒரு கூல் அலசல்.


முஸ்கி : இந்த பதிவிலுள்ள டிஸ்கியை படித்த பின், இறுதியாக 
டண் டணா டண் என சொல்லிக்கொள்ளவும்.

இப்போது பிரச்சாரத்திற்கு வரும் தலைவர்களை கடுப்படிக்கும் சீசன் போல, விஜயகாந்த், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரை கடுப்படிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்துக்கொண்டிருப்பதாக தெரிகிறது.எல்லா கட்சிகளும் துணைத்தொழிலாக தொலைக்காட்சிகள்  நடத்துவதால், முக்கிய கட்சிகளின் ஊடகங்களும் இதை கவனமாக பார்த்துக்கொண்டே இருக்கின்றன.

சமீபத்தில் அதிமுக, விஜய் ரசிகர் மன்ற கொடிகளை இறக்கச்சொன்ன விஜயகாந்த், மக்கள், கலைஞர், சன் டீவிகளுக்கு விருந்தானது இன்னமும் எல்லா டீ கடை பென்சுகளிலும் பஜ்ஜியோடு சேர்ந்து கசக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

நேற்று வேலூரில், ஜெயலலிதா கூட்டத்திற்கு வரவழைக்கப்பட்டிருந்த(???), பெண்கள் காத்திருந்து, காத்திருந்து மயங்கி  விழுந்தார்கள் , கூட்ட நெரிசலில் சிக்கி விழுந்தவர்களை ஜெயலலிதா கண்டு கொள்ளாமல், தனது உரையை தொடர்ந்து வாசித்தார்(???) என்பது கலைஞர், சன் டீவிகளுக்கு மெல்லுவதற்கு கிடைத்த லேட்டஸ்ட் அவல். ஜெயலலிதா ஓரக்கண்ணால் அவர்களை பார்த்ததையும், பேசி முடித்த பின் அவர் முகத்தை திருப்பிக்கொண்டு போனதையும் திரும்ப, திரும்ப காட்டி இந்த தொலைக்காட்சிகள் பிறவிப்பயனை அடைந்தன.    

சேலம் கூட்டத்தில் கூட, கூட்டத்தினர் அடிக்கடி கத்திக்கொண்டே இருந்ததால் கருணாநிதி, ஒரு கட்டத்தில் பேச்சை நிறுத்தி விட்டு, என்னாப்பா என வீரபாண்டியாரை பார்த்தார். பின் சமாளித்துக்கொண்டு பேச்சை தொடர்ந்தார். தனது மூத்த மகன் சென்னை அப்போலோ மருத்துவமனையில், உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் நேரத்தில் தான் சேலத்தில் பேசுவதற்கு வந்ததாக ஒரு கட்டத்தில் குறிப்பிட்டார்.

திருவாரூர், கோவை, ஈரோடு பொதுக்கூட்டங்களில், பிரச்சாரம் முடியும் பத்து மணி வரை பேசிய கருணாநிதி, சேலம் கூட்டத்தில்  பத்து  நிமிடங்கள் முன்னதாகவே முடித்துக்கொண்டார். பேசி முடித்தவுடன் ஏதோ சத்தமாக கூறினார், அப்போது அவர் முன்பு இருந்த மைக் வேகவேகமாக அகற்றப்பட்டது.    

சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்புக்களும் அவரை அதிகம் பாதித்திருப்பதை அவர் பேச்சின் மூலம் உணர முடிந்தது.

"கருத்துக்கணிப்புக்கள், நாடாளுமன்ற தேர்தலில் போது பலிக்காதது போலவே இப்போதும் பலிக்காது, யாரும் கருத்துக்கணிப்புக்களை நம்ப வேண்டாம் - தமிழகத்தில் இப்போது அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுகிறது - வீரபாண்டியார், அழகிரி ஆகியோரின் பாதுகாப்பு விலக்கப்பட்டது யார் சொல்லி நடந்தது என்பது எனக்குத்தெரியும்"


அடுத்து அதிமுக ஆட்சி வந்தால், திமுகவின் நல்ல நலத்திட்டங்கள், நிறுத்தப்படும்,   அதிமுக ஆட்சி வந்தால் எப்படி சட்டமன்றத்தில் பேச முடியும் என்று அச்சமாக இருக்கிறது. ஆனாலும் பயப்படவில்லை. என்னை சுற்றி வீரபாண்டியன்கள் இருக்கிறார்கள். 

இவையெல்லாம் சேலம் கூட்டத்தில் கருணாநிதி பேசிய விஷயங்களின்  ஹைலைட்.

இவையெல்லாம் கருணாநிதி கடுப்பில் இருப்பதை வெளிக்காட்டுவதாகவே உள்ளது.

ஒரு வேளை ஜெயலலிதாவோ, விஜயகாந்தோ இப்படி கடுப்பில்
பேசியிருந்தால், கலைஞர் மற்றும் சன் டீவிகள் இன்னேரம், ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை ஒளிபரப்பி சந்தோஷப்பட்டிருக்கும், கடுப்பின் குறுக்கு வெட்டுத்தோற்றத்தை ஆராய்ச்சி செய்திருக்கும்.

ஆனால் பாவம் ஜெயா டீவி, இந்த அரசியல் வித்தை தெரியாமல் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறது.

டிஸ்கி:
கலைஞர் பேசும் போது, "மயிலாப்பூர் மாவீரன் தங்கபாலு"
சற்றே கண்ணயர்ந்ததாக நமது உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதை யாரும் கலைஞரிடமோ, அஞ்சாநெஞ்சன் அழகிரியிடமோ சொல்லி விடாதீர்கள். அப்புறம்...

18 கருத்துரைகள்:

எல் கே said...

வீரபாண்டியார் பயந்து சேலத்தை விட்டு வெளியே சென்று வெறுத் தொகுதியில் நிற்கிறார். இவர்தான் கருணாநிதியை காப்பாத்த போறார் ?

ம.தி.சுதா said...

நாங்களும் அரசில் பதிவு போட்டிருக்கோமுல்ல...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஈழத் தமிழனுக்கு கருணாநிதியில் பிடித்த ஒரே சம்பவம்

தமிழ்வாசி பிரகாஷ் said...

tan tana tan.... tan tana tan....

சி.பி.செந்தில்குமார் said...

ஆனால் மக்கள் மன நிலை கலைஞருக்கு சாதகமாகவே உள்ளது..

Unknown said...

இந்த தடவை தி.மு.க வுக்கு ஆப்புதான்...

Speed Master said...

//கலைஞர் பேசும் போது, "மயிலாப்பூர் மாவீரன் தங்கபாலு"
சற்றே கண்ணயர்ந்ததாக நமது உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதை யாரும் கலைஞரிடமோ, அஞ்சாநெஞ்சன் அழகிரியிடமோ சொல்லி விடாதீர்கள். அப்புறம்...


பத்த வச்சுட்டிய பரட்டை


ஒரு சந்தேகம்
http://speedsays.blogspot.com/2011/04/blog-post.html

பாண்டியன் said...

தொடருங்கள்.தொடருங்கள்.தொடருங்கள்.தொடருங்கள்.தொடருங்கள். enjoyyyyyyyyy................

சசிகுமார் said...

மே 13 க்கு பிறகு மஞ்சள் துண்டு ஈரமாகிவிடும்

varun kumar, salem said...

//ஆனால் பாவம் ஜெயா டீவி, இந்த அரசியல் வித்தை தெரியாமல் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறது.
//
this is the ultimate comedy..when u talk the way kalaingar tv, sun tv and makkal tv.. u shud also be genuine in saying about Jaya tv.. but your pro stand on admk didnt allow you to comment on jaya tv.. rather you are trying to sympathize

Jayadev Das said...

\\தனது மூத்த மகன் சென்னை அப்போலோ மருத்துவமனையில், உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் நேரத்தில் தான் சேலத்தில் பேசுவதற்கு வந்ததாக ஒரு கட்டத்தில் குறிப்பிட்டார்.
\\இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு பிரச்சாரம் பண்ணுவது எதற்கு? நாட்டுக்கு சேவை செய்யவா? பதவிக்கு வந்து பெண்டாட்டி பிள்ளைகளுக்காக கொள்ளையடிக்கத் தானே? அதுக்குத்தான் எல்லோருமே கஷ்டபடுரான்களே, நீ மட்டும் என்ன ஸ்பெஷல்??

ttpian said...

போர் என்றால் மக்கள்(தமிழர்கள்) சாகத்தான் செய்வார்கள்!
அரசாங்க காசில் பத்து பைசா கூட தொடாத நாயகி நான்!
எனக்கு ஒட்டு போட்டு மக்கள் அனைவரும் மாங்காய்
மடையர்களாக இருக்குமாறு புரட்சி தலைவர் மீது ஆணையிட்டு
அகம்பாவம் இல்லாமல்,ஆணவம் இல்லாமல்,....
அம்மாவின் ஆணைப்படி.காலில் விழுந்து கும்பிட தயாராக இருங்கள்

middleclassmadhavi said...

விஜயகாந்தின் பதிலை நேரடி ஒளிபரப்பில் காப்டன் டிவியில் பார்த்தீர்களா?!

MANO நாஞ்சில் மனோ said...

ஹே அப்பிடியே ஒரு பதிவை ஒப்பெத்தியாச்சி...

இராஜராஜேஸ்வரி said...

கடுப்படிக்கும் சீசன்

பகிர்வுக்கு நன்றிகள், தொடருங்கள்.

Anonymous said...

தினசரி கடுப்பாகிகிட்டுத்தான் இருக்கார்

Anonymous said...

ஒண்ணியும் வேலைக்காகாது

Anonymous said...

ஆனால் மக்கள் மன நிலை கலைஞருக்கு சாதகமாகவே உள்ளது..
//
இங்க பார்றா

Anonymous said...

ஆனால் மக்கள் மன நிலை கலைஞருக்கு சாதகமாகவே உள்ளது..
//
இங்க பார்றா

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்